செவ்வாய் தோஷகாரர்களுக்கான பரிகாரங்கள்

ஜாதகத்திலே பல வகையான தோஷங்கள் உள்ளன. அவைகளில் நாக தோஷம் மாங்கல்ய தோஷம் , பிதுர்தோஷம், பாலாரிஷ்ட தோஷம், என்ற பல வகையான தோஷங்கள் உள்ளன. மேலே சொன்ன தோஷங்களை காட்டிலும் செவ்வாய் தோஷத்தை கண்டு பயப்படுவர்களே அதிகம்.
இது வீணான பயமே. எந்த ஒரு கிரகமும்
கெடுதல் செய்வதில்லை. இயற்கையில் பாவியானவரே செவ்வாய். ஆனால் அவர் சுப
கிரகங்களுடன் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ தன இயற்கையான குணத்தை இழந்து
நன்மையே செய்து விடுவார்.பாவிகளின் சம்பந்தம் பெருமானால் இயற்கையான
பாவத்தன்மை அதிகமாகி விடுகிறது.
இந்த செவ்வாய் தோஷத்தால் திருமண
நிலையில் பாதிக்கபடுபவர்களே அதிகம். லக்னத்துக்கு இரண்டு, நான்கு, ஏழு,
எட்டு, பன்னிரண்டில், செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது.
சந்திரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டில், செவ்வாய் இருந்தால் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது.
சுக்கிரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது.
லக்னம்,
சந்திரன், சுக்கிரன், இந்த மூன்றுக்கும், இரண்டு, நான்கு, ஏழு, எட்டு,
பன்னிரண்டில், இருப்பது, செவ்வாய் தோஷம் அதிகமாக இருக்கும் நிலையாகும்.
லக்னத்துக்கு
எட்டாம் இடம் ஆயுளை குறிக்கும் இடமாகும். பெண்களுக்கு, மாங்கல்ய
பலத்தையும், கணவரின் ஆயுளையும், இருவருக்கும் ஏற்படும் இன்பத்தையும்,
குறிக்கும் இடமாக கருதப்படுகிறது.
இந்த இடங்களில் செவ்வாய்
இருந்தால் மேலே சொன்னவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும். மேலும் எட்டாம்
இடத்தில் செவ்வாய் இருந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமான
உதிரப்போக்கு இருக்கும்.
செவ்வாய் தோஷம் நீங்கும் நிலை.
செவ்வாய் தோஷம் செவ்வாய் எட்டில் இருந்து, அது, மேஷ ராசி, விருசிக ராசி, போன்ற ஆட்சி வீடாக இருந்தாலும் அது தோஷமில்லை
செவ்வாய் மகர ராசியில் உச்சம் பெற்றாலும் தோஷமில்லை
செவ்வாய் இரண்டாம் பாவத்தில் இருந்து, அது மேஷம், விருசிகம், மிதுனம் கண்ணின் ராசியாக இருந்தாலும் அது தோஷமாகாது
செவ்வாய் நான்காம் பாவத்தில் இருந்து, அது சுக்ரன், வீடான ரிஷபம், துலாம் ராசியில் இருந்தாலும் அது தோஷமில்லை .
செவ்வாய் பன்னிரண்டில் இருந்து, அது, கன்னி, மிதுனம், ரிஷபம் , துலாம், ராசியாக இருந்தாலும், அது செவ்வாய் தோஷமாகாது.
லக்னம்
, சந்திரன், சுக்கிரன், இம்மூன்றிற்கும் இரண்டு, நான்கு, ஏழு, எட்டு,
பன்னிரண்டு, இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் அந்த பெண்ணை காவல் துறை,
ராணுவம், மருத்துவமனையில் பணியாற்றுபவர், இவர்களுக்கு திருமணம் செய்து
கொடுத்தால் செவ்வாய் தோஷம் அதிகம் பாதிப்பதில்லை.
சற்று வயது
வித்தியாசம் அதிகம் உள்ள கணவராக அமைந்தாலும். ( சுமார் 10 வருட வயது
வித்தியாசம்) அல்லது இரண்டாம் தாரமாக அமைந்தாலும். செவ்வாய் தோஷம் பாதிப்பை
தருவதில்லை.
பொதுவாக ஆண்களுக்கு முப்பது வயதுக்கு மேலேயும்.
பெண்களுக்கு இருபத்தேழு வயதுக்கு மேலேயும் திருமணம் செய்து வைத்தால் எந்த
தோஷமும் பாதிப்பை தருவதில்லை.
செவ்வாய் தோஷ திருமண தடை நீக்கும் பரிகாரம்.
செவ்வாய் கிழமை விரதமிருந்து.
வீரத் வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரசோத யாத்
என்ற
செவ்வாய் காயத்திரி மந்திரத்தை தினமும் 45 தடவை உச்சரித்து
செவ்வாய்கிழமையில் கோவிலுக்கு சென்று நவகிரக வரிசையில் செவ்வாய் பகவானை
தரிசித்து வணங்கி, வந்தால் திருமண பாக்கியம் உடனே கிடைப்பதும்
மட்டுமல்லாமல்,மனதில் உள்ள அனைத்து குறைகளும் விரைவில் நிவர்த்தியாகும்.
முடிந்தால்
செவ்வாய் பகவானுக்கு உகந்த திருத்தலமான இந்தியாவில் தமிழ் நாட்டில்
சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வருவது.
உடனடியாக பலன்கள் கிடைக்கும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



