ஹைதராபாத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள்!

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமிட்டிருந்த குண்டுவெடிப்பு தாக்குதலை இந்திய காவல்துறை முறியடித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை வெடிபொருட்களுடன் இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச காவல்துறையினர் நடத்திய கூட்டு நடவடிக்கையில் சிராஜ் மற்றும் சமீர் ஆகிய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்திய ஊடக அறிக்கைகளின்படி, சந்தேக நபரான சிராஜ், திட்டத்தின் ஒரு பகுதியாக விஜயநகரிலிருந்து வெடிபொருட்களை வாங்கியதாக தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தில் தாக்குதல்களை நடத்த சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவிடமிருந்து சந்தேக நபர்களுக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் உட்பட பல மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
உலக அழகி போட்டி தற்போது இந்தியாவின் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த உலக அழகி போட்டியில் 140 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர், மேலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அனுதி குணசேகரவும் பங்கேற்கிறார்.
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி மே 31 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



