நெல்லியடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து! 2 மில்லியன் சொத்துக்கள் சேதம்
#SriLanka
#Jaffna
#Lanka4
#fire
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
6 hours ago

யாழ். நெல்லியடி நகர்ப்பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
கரவெட்டி பிரதேச சபையின் செயலாளரினால் உடனடியாக யாழ்.மாநகர சபை தீ அணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கி ஸ்தலத்திற்கு தீயணைப்பு படையும் வருகை தந்திருந்த போதும் பிரதேச சபையின் ஊழியர்களின் முயற்சியும் பொதுமக்களின் பங்களிப்புடனும் ஏனைய இடங்களுக்கும் பரவாமல் தீ கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டது.
குறித்த தீவிபத்தினால் வர்த்தக நிலையத்தில் இரண்டு மில்லியனிற்கும் அதிகளவான சொத்துக்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



