கொழும்பு மாவட்டத்தில் வேகமாக பரவும் நோய் தொற்று - ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!

கொழும்பு மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை அவசரமாகச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று(20) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கொழும்பு மாவட்டத்தில் கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை முறையாகப் பராமரிக்காதது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, குப்பை மற்றும் கழிவுநீரை முறையாக அகற்றுவது குறித்து நிலையான தீர்வுகளுடன் கூடிய திட்டத்தைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தொடர்புடைய திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் காவல்துறையை வலுப்படுத்துதல் மற்றும் சமூகக் குழுக்களின் தீவிர பங்கேற்பைப் பெறுவதன் மூலம் சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



