முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகன் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #KehaliyaRambukwella #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகன் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்நிலையில் அவர் விசாரணையின் பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார்.

 அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவான், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கினார்.

 அதன்படி, வாக்குமூலத்தை வழங்குமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபர் ரமித் ரம்புக்வெல்ல இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1747778062.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4