ஜனாதிபதி நிதிய மோசடி: முக்கிய புள்ளிகளை விசாரிக்க அனுமதி

#SriLanka #Crime #Lanka4 #monkey #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
8 hours ago
ஜனாதிபதி நிதிய மோசடி: முக்கிய புள்ளிகளை விசாரிக்க அனுமதி

ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 போலியான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்தில் அங்கீகரித்த உயர்ந்தபட்ச தொகையையும் விட கூடுதலான தொகையைப் பெற்று மோசடி செய்துள்ளதாக குறித்த 12 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 கெஹெலிய ரம்புக்வெல்ல, ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த, விதுர விக்கிரமநாயக்க ஆகியோரின் வங்கிக் கணக்குகளும் பரிசோதிக்கப்படவுள்ளது. மேலும் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலப்பகுதிகளிலே இந்த ஜனாதிபதி நிதியத்தின் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 

 அதன்படி, இதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கொழும்பு நீதவான் நீதிமன்றம் அரச வங்கிகளுக்கு கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747947111.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!