நுவரெலியாவில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து : 23 பேர் படுகாயம்!

#SriLanka #Accident #NuwaraEliya #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
நுவரெலியாவில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து : 23 பேர் படுகாயம்!

நுவரெலியாவில் நேற்று (23) இரவு இடம்பெற்ற விபத்தில் சுமார் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து நேற்று இரவு 11:45 மணியளவில் டோப்பாஸ் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்து நடந்த நேரத்தில், பேருந்தில் ஓட்டுநர் உட்பட 54 பேர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட மூன்று ஆண்களும், 20 பெண்களும் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 குருநாகலிலிருந்து பதுளைக்கு ஒரு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பயணிகள் குருநாகல, கிரிவௌல பகுதியைச் சேர்ந்தவர்கள். 

 நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4