மட்டக்களப்பில் இருந்து காலி நோக்கி சென்ற பேருந்து விபத்து - 12 பயணிகள் படுகாயம்!

#SriLanka #Accident #Bus #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
மட்டக்களப்பில் இருந்து காலி நோக்கி சென்ற பேருந்து விபத்து - 12 பயணிகள் படுகாயம்!

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, முன்னால் பயணித்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

 இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 12 பயணிகள் மற்றும் டிப்பர் லாரியின் ஓட்டுநர் காயமடைந்து தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 ஆபத்தான நிலையில் இருந்த ஒரு பயணி உயிரிழந்தார். இறந்தவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை. சடலம் தங்காலை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

 தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4