யாழில் நிமோனியா காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
யாழில் நிமோனியா காய்ச்சலால்  ஒருவர் உயிரிழப்பு!

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த 75 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சில தினங்களாக உடல் சுகயீனமடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4