வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்!

#SriLanka #Arrest #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
2 weeks ago
வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்ட மூன்று  இலங்கையர்கள்!

போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

 இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 இலங்கையர்களையும் கைது செய்துள்ளனர்.

 வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் பொருள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!