கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது

#ARREST #CANADA #money #Fraud
Prasu
1 year ago
கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கனடாவின் மொன்ரியலில் வயோதிபர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொன்ரியல் பொலிசார் அறிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக நாடு முழுவதும் இதுபோன்ற ஊழல்கள் அதிகரித்து வருகின்றன என்றும் பல நகரங்களில் பொலிஸாரால் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மொன்ரியல் பொலிசார் 34, 39, மற்றும் 45 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் 36, 37 வயதுடைய இரண்டு பெண்களை கைது செய்தனர்.

இதில் மூவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பொலிசார், மற்ற இருவரை நிபந்தனையுடன் பிணையில் விடுவித்துள்ளனர்.

மோசடி முறைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும், இதுவரை புகாரளிக்கப்படாத திருட்டுகளும் இருக்கக்கூடும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1748330475.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!