பஹ்ரைனில் இலங்கையர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்!

இலங்கையிலுள்ள திறமையான தொழிலாளர்களுக்கு பஹ்ரைனில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்த பஹ்ரைனில் இயங்கும் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிபூண்டுள்ளது என்று கூறிய கோசல விக்ரமசிங்க, பஹ்ரைன் இராச்சியத்தில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தொடர்ச்சியான ஆதரவையும் ஈடுபாட்டையும் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் பேசிய பஹ்ரைனுக்கான இலங்கை தூதர்ஷானிகா திசாநாயக்க, திறமையான பணியாளர்களை விரிவுபடுத்துவதற்கும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஏற்ப, தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



