பூனைக்கு மணி கட்டுவது யார்!

#SriLanka #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
பூனைக்கு மணி கட்டுவது யார்!

மணல், கல் ஏற்றும் டிப்பர் ட்றக்குகளில் (Tipper Truck) மோதி உயிரிழக்கும் பொதுமக்களின் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

எனக்கு தெரியவே பலர் இலங்கையின் பல மாவட்டங்களிலும் இந்த "ஆளடியன்" என்று பலராலும் வர்ணிக்கப்படும் டிப்பர் ட்றக்கில் மோதி உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ உள்ளனர். கடந்த வாரம் ஒரு வைத்தியர் இந்த வாரம் ஒரு ஆசிரியர் டிப்பர் மோதி உயிரிழந்துள்ளது வேதனை தருகின்றது. 

 போரால் பெருமளவு உயிர்களை காவு கொடுத்த தமிழினம் உயிர்கள் மீது அதீத அக்கறை காட்டுவதற்குப்பதிலாக அதைப்பற்றி பேசுவதையே தவிர்த்து வருகின்றது. இந்த டிப்பர் வாகனக்களில் பிரேக் எவ்வளவு நன்றாக இருந்தாலும் இலகுவில் ப்ரேக் போட்டு நிறுத்த முடியாது. போதாக்குறைக்கு பெரும் செல்வந்தர்களாலும், அரசியவாதிகளாலும் இயக்கப்படும் இவ்வாகனங்கள் அதி கூடிய வேகத்தில் பயணிப்பதும், காவல்துறை அதை கண்டும் காணாது விடுவதும் சாதாரணமான விடயமாக கடந்துபோக முடியாதுள்ளது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாகனங்கள் அதிகம் உள்ள peak hour நேரத்தில் ட்றக் போன்ற பெரிய வாகனங்கள் வீதியில் ஓடுவதை தடை செய்யும் சட்டம் உள்ளது. அவுஸ்திரேலியாவிலும் சில நகரங்களில் இந்த தடை இருந்து வருகின்றது.

 இலங்கையில் ஏன் இந்த தடை கொண்டுவர முடியாது? உள்ளூராட்சி சபைகள் தமது பிரதேசங்களில் இத்தடையை கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன். 

முகநூல் பதிவு 

 பேசுவோம். 

 -Kumaravelu Ganesan-

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4