தமிழரசு கட்சி - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று முக்கிய சந்திப்பு..!

#SriLanka #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
தமிழரசு கட்சி - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று முக்கிய சந்திப்பு..!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 குறித்த சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4