தமிழரசு - முன்னணி சந்திப்பு! சபைகள் அமைக்க ஆதரவு! கொள்கை ரீதியாக இணக்கம் இல்லை

#SriLanka
Mayoorikka
1 year ago
தமிழரசு - முன்னணி சந்திப்பு! சபைகள் அமைக்க ஆதரவு! கொள்கை ரீதியாக இணக்கம் இல்லை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

 உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி சபைகளை அமைப்பதில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இனக்காப்பாடுகளை எட்டுவது குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் செயற்படும் கட்சிகள் கொள்கை அடிப்படையிலான கூட்டுறவை ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில், உள்ளுராட்சித் தேர்லில் வடக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

 கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருது தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்துக்கு ஓர் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர் மக்களின் குறித்த ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. இதனை செயற்படுத்துவதற்கான மிக முக்கியமான பொறிமுறை, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுவதே.

 மாறாக கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு மாறாக சபைகளில் ஆட்சியைப்பதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை. கொள்கையை விட்டுக்கொடுத்து ஆட்சியமைக்க வேண்டிய எந்தத் எமக்கு இல்லை. இதற்கு மாறாக குறித்த உள்ளுராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு தவிசாளர் பதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்குவது என ஒருதலைப் பட்சமாகவே நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். எவ்வாறாயினும், துரதிர்டவசமாக இன்றைய சந்திப்பில் கொள்கை ரீதியான ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார். 

 இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நீண்ட கலந்துரையாடல் உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பின்னரான சபைகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல். ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆதரவை வழங்குவது என்ற எமது நிலைப்பாட்டை தேர்தலுக்குப் பின்னர் நாம் அறிவித்திருந்தோம். 

அண்மையில் இதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்த அதேவேளை இணைந்து செயற்படுவதாக இருந்தால் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 நிர்வாகங்களை அமைப்பது தொடர்பான இரண்டு கட்சிகளின் நிலைப்படும் ஒன்றாக இருந்த காரணத்தினால் இந்த சந்திப்புக்கான அழைப்பினை விடுத்திருந்தோம். இந்த நிலைப்பாட்டினை இரண்டு கட்சிகளும் காரணத்தினால் இந்த அடிப்படையிலேயே சபைகள் அமைக்கப்படும் என நாங்கள் உறுதியாக சொல்ல முடியும். எவ்வாறாயினும் கொள்கை அளவில் இணைவது குறித்து தொடர்ந்து பேசவேண்டிய தேவை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4