உலக அழகி இறுதி போட்டியில் பங்கேற்கும் இலங்கை அழகி!

#SriLanka #Lanka4 #Miss World #SHELVAFLY
Mayoorikka
1 year ago
உலக அழகி இறுதி போட்டியில் பங்கேற்கும் இலங்கை அழகி!

இந்தியாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று (31) ஹைதராபாத்தில் உள்ள HITEX கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை அழகி அனுதி குணசேகரவும் பங்கேற்கவுள்ளார். 

 'மிஸ் வேர்ல்ட் 2025' கிரீடத்தை வெல்லும் நோக்கில் உலகம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட அழகு ராணிகள் போட்டியிட்டனர். 

 மே 10 முதல் நடைமுறையில் உள்ள இந்த ஆண்டு உலக அழகி தேர்வின்படி, 40 பெண்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

 அவர்களில் 18 பேர் ஏற்கனவே அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அது கடந்த சில நாட்களாக ஒவ்வொரு கருப்பொருளின் கீழும் நடைபெற்ற நிகழ்வுகள் மூலம் அவர்கள் காட்டிய திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். 

 அரையிறுதிப் போட்டிகளில், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 10 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் இறுதியாக ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த ஐவரிலிருந்து உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் உலக அழகி தேர்ந்தெடுக்கப்படுவார்.

 குறித்த உலக அழகியின் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் ஐவரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை அழகி அனுதி குணசேகரவும் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றார்.

 உலக அழகிப் போட்டியில் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகிய முதல் இலங்கை அழகி என்ற இடத்தை அனுதி குணசேகர பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4