மாங்குளம் விபத்து! தந்தையை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

#SriLanka #Death #Accident #Lanka4
Mayoorikka
1 year ago
மாங்குளம் விபத்து! தந்தையை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

மாங்குளம் பகுதியில் கடந்த மே மாதம் 26 ஆம் திகதி காலை இடம்பெற்ற கனரக வாகனம் - கார் மோதிய கோர விபத்தில் யாழ். இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் எஸ். பிரபாகரன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார். 

 இந்தியாவில் தல யாத்திரையை முடித்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த நிலையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருடைய மூத்த மகனான 27 வயதுடைய அக்‌ஷை நேற்று சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். 

 குறித்த விபத்தில் அவரது மனைவி,மூத்த மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மேற்படி மகன் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் உயரிழப்புக்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4