சர்வதேச தொழிலாளர் மாநாடு இன்று முதல் ஜெனிவாவில்! பயணமாகிய முக்கிய புள்ளி

#SriLanka #Geneva #UN #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
சர்வதேச தொழிலாளர் மாநாடு இன்று முதல் ஜெனிவாவில்! பயணமாகிய முக்கிய புள்ளி

சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. 

 சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று ஜெனிவாவுக்குப் பயணமாகியுள்ளதாக அந்த அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

 இந்த ஆண்டு சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் தொழிற்துறையிலுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

 பணியிடத்தில் உயிர் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு, முறைசாரா தன்மையை எதிர்த்துப் போராடுதல் மற்றும் முறையான வேலையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த ஆண்டு சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4