செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணி நிறுத்தப்படும் அபாயம்! கஜேந்திரகுமார்

#SriLanka #Jaffna #Nallur #Gajendrakumar Ponnambalam #Lanka4
Mayoorikka
1 year ago
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணி நிறுத்தப்படும் அபாயம்! கஜேந்திரகுமார்

யாழ் நல்லூர் செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்படக்கூடிய அச்சம் உருவாகியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

 நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலநந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணியில் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் என்று கூறும் தன்மையை அது கொண்டுள்ளது. எனினும், புதைகுழி உள்ள பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அத்துடன், அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கும், சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் போதுமானளவு நிதி இல்லை. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி 20 நாட்களுக்குகூட போதாதென மதிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு நிதி இல்லாமல்போனால் அகழ்வுப் பணி நிறுத்தப்படக்கூடிய அச்சம் உள்ளது. எனவே, குறித்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.

 அரசாங்கத்துக்கு தேவையேற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றுத்தர எம்மால் உதவ முடியும். உண்மை கண்டறியப்பட வேண்டும். சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4