கற்றாழையின் மருத்துவ குணங்கள்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
கற்றாழையின் மருத்துவ குணங்கள்!

கற்றாழைச்சாறு சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றன. தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயம் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது. 

 நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். 

இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சரும நோய்களையும் குணப்படுத்துகிறது. 

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழை சாற்றை தினமும் இரண்டு அவுன்ஸ் குடிப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு வராமல் இருக்கும். தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைய தொடங்கும், உஷ்ணம் கல் அடைப்புகள் சரியாகும். தமிழில் இதற்கு கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி என வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4