இலங்கையில் மீன்களின் விலைகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

#SriLanka #prices #Fish #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
இலங்கையில்  மீன்களின் விலைகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதேவேளை மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.

 தற்போதைய மோசமான வானிலை மற்றும் பருவமழை காரணமாக கடல் கொந்தளிப்பாக இருப்பதால் அதிகமான கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில்லை.

 இதன் விளைவாக தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மீன்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஹட்டனில், தலபத், கொப்பரா ஆகிய மீன்களின் ஒரு கிலோ கிராமுக்கான சில்லறை விலை, 3,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

 மேலும், மீன் விலை உயர்வு இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என்றும், இதற்கு இணையாக குளத்து மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4