செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி சர்வதேசத்தின் கண்காணிப்பில் இடம்பெறவேண்டும்! வெடித்த போராட்டம்

#SriLanka #Jaffna #Protest #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி சர்வதேசத்தின் கண்காணிப்பில் இடம்பெறவேண்டும்! வெடித்த போராட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி யாழில் தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. 

 வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் யாழ் நகர நுழைவாயில் - நாவற்குழி பகுதியில் இடம்பெற்று வருகின்றது. புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் வெளிப்படைதன்மையை உறுதிசெய்யுமாறு கோரி இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி "செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மக்கள்பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4