செம்மணியில் இதுவரை இடம்பெற்ற அகழ்வுகளில் 19 மனித என்புத் தொகுதிகள் மீட்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
செம்மணியில் இதுவரை இடம்பெற்ற அகழ்வுகளில் 19 மனித என்புத் தொகுதிகள் மீட்பு!

செம்மணியில் நேற்றுவரை இடம்பெற்ற முதற்கட்ட அகழ்வுகளில் 19 முழுமையான மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து நீதிமன்றம் முறையான நடவடிக்கையுடன் இன்னும் 45 நாட்கள் அகழ்வுப்பணியைத் தொடர உத்தரவிட்டிருக்கிறது. 

தகனம் நடைபெறும் இந்த மயானத்தில் சிதிலமடைந்த,அவசரமாகப் புதைக்கப்பட்ட இந்த மனித எச்சங்களை முறையான நவீன விஞ்ஞான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, பொறுப்பானவர்கள், நடந்த விடயங்கள் வெளிப்படுத்தப்படவேண்டும். 

இத்தனை அங்கே நடந்தும் தெற்கின் பிரதான ஆங்கில, சிங்கள ஊடகங்களின் கண்கள் திறந்ததாக இல்லை. (Daily Mirrorஇல் ஒரு செய்தி, 3 நாட்களுக்கு முதல், News Wireஇல் ஒன்று சில மணிநேரத்துக்கு முதல் - அவ்வளவு தான்) ஆட்சி மாறியும் இந்த விடயங்கள் எவையும் மாறியதாக இல்லை. இனி அரசாங்கமும் இது பற்றி நியாயமான விசாரணை நடத்துமா என்பதும் ஐயத்துடனேயே நாம் பார்க்கும் விடயமாக இருக்கிறது. 

இதனால் தான் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அண்மையில் செம்மணியில் நடத்திய போராட்டத்தில் சர்வதேசக் கண்காணிப்பின் மத்தியில் இரண்டாம் கட்ட அகழ்வுகள் இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

 இயலுமானவரை இதை தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், சிங்களத்தில் கொண்டுசேர்த்து அழுத்தம் கொடுப்பது அவசியமாகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4