இலங்கையில் கொரோனா பரவல் குறித்து வெளியான தகவல்!

#Corona Virus #SriLanka #Covid 19 #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
இலங்கையில் கொரோனா பரவல் குறித்து வெளியான தகவல்!

கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு பொதுமக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் நிபுணர் அதுல லியனபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போது பரவிவரும் கோவிட் -19 திரிபுகளுக்குக் கடுமையான நோய் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய இயலுமைகள் கிடையாது. சாதாரண சுவாச நோய்க்கான அறிகுறிகள் மற்றும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும், வேறு எந்த அறிகுறிகளையும் கொண்டிராதமையினால் சுவாச நோய்களில் ஒன்றாக கோவிட் வகைப்படுத்தப்படுகிறது.

 எனவே, சுவாச நோய்களைக் கொண்டிருக்கும் ஒருவர், சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால் மாத்திரமே மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவது பொருத்தமானதாக இருக்கும்.என அவர் கூறியுள்ளார். இதேவேளைமேல் மாகாணத்தில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்தார். 

 மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இந்த நோய்கள் அதிகமாகக் காணப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சிக்குன்குன்யா மற்றும் டெங்கு காய்ச்சலின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஒரே மாதிரியாக காணப்படும் எனவும், காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் வாந்தி ஏற்படக்கூடும் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியதோடு, அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், விரைவில் வைத்தியரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெற வேண்டுமெனவும் தெரிவித்தார். 

 மேலும், சிக்குன்குன்யா நோய் பெரும்பாலும் உடல் வலியை ஏற்படுத்துவதால், வலியைக் குறைக்க வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4