டெங்கு பாதிப்புக்குள்ளாவோரில் மாணவர்களே அதிகம்! சுகாதார துறை எச்சரிக்கை

#SriLanka #Student #Hospital #Lanka4 #Dengue #SHELVAFLY
Mayoorikka
1 month ago
டெங்கு பாதிப்புக்குள்ளாவோரில் மாணவர்களே அதிகம்! சுகாதார துறை எச்சரிக்கை

5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கமைய டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொடர்பில் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்குவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 பாடசாலைகளுக்குக் கள ஆய்வுகளை மேற்கொள்ளும் போது டெங்கு பெருக்கம் உள்ள இடங்கள் அடையாளங் காணப்பட்டால் பாடசாலை அதிபரே பொறுப்பேற்க வேண்டும். மேலும், காய்ச்சல், வாந்திபேதி, கை மற்றும் கால் வலி என்பவை ஏற்பட்டால் உடனே வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும் என வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்தார். 

 அத்துடன், சிக்கன்குனியா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உடல் வலிகளைக் குறைப்பதற்காக வலிநிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பெரசிடமோல் மாத்திரைகளை உட்கொள்ளுமாறும் வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1748040119.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!