இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றோர் குற்றப்புலாய்வு திணைக்களத்தில்!

#SriLanka #Police #Lanka4 #Sri Lankan Army #SHELVAFLY
Mayoorikka
1 year ago
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றோர் குற்றப்புலாய்வு திணைக்களத்தில்!

இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் குற்றப்புலனாய்வு சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

 தம்புத்தேகம பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த நபர்களை 05 ஆண்டுகளுக்கு பணியமர்த்துவதற்கான தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்

 மேலும் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் குற்றப் புலனாய்வுத் துறைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அதன்படி, எதிர்காலத்தில் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஒவ்வொரு மாகாண மக்களும் மாகாண மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4