AI பயன்படுத்தி மாணவிகளின் ஆபாச படங்களை வெளியிட்ட மாணவர்கள்!

#SriLanka #Police #Student #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
AI பயன்படுத்தி மாணவிகளின் ஆபாச படங்களை வெளியிட்ட மாணவர்கள்!

செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி மாணவிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட மாணவர்கள் இருவர் சிறைச்சாலை சிறார் மறுவாழ்வு மையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மாணவிகள் நால்வரின் முகங்களைக் பயன்படுத்தி AI மூலம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். AI மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோக்கள் மற்றும் படங்கள் பாடசாலையிலன் வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. 

 குறித்த ஆபாச படத்தைப் பார்த்த மாணவியின் தந்தை இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்தே பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு ஹொரணை நீதிமன்றத்தில் முனனிலைப்படுத்தப்பட்டனர்.

 விசாரணையை மேற்கொண்ட ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய, மாணவர்கள் இருவரையும் சிறைச்சாலைத் துறையின் கீழ் உள்ள சிறார் மறுவாழ்வு மையத்தில் எதிர்வரும் (13) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

 பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI முற்றுமுழுதாக செயற்பாட்டுக்கு வர முன்னர் AI ஐ தவறாகப் பயன்படுத்தியமைக்கு இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4