மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வரவுள்ள முக்கிய அறிவிப்பு!
#SriLanka
#Electricity Bill
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
4 weeks ago

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (11) அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவு தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெற்ற பின், அதன் மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்மொழிவு கட்டண முறைமையுடனான இணக்கத்தன்மை குறித்த மீளாய்வு நடவடிக்கைகளும் இறுதிக் கட்டத்தில் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



