மதுகமில் தந்தை மற்றும் மகன் மீது வாள்வெட்டு - மகன் உயிரிழப்பு!

#SriLanka #Crime #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
மதுகமில் தந்தை மற்றும் மகன் மீது வாள்வெட்டு - மகன் உயிரிழப்பு!

மதுகம, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மகன் உயிரிழந்துள்ளார். 

நேற்று (11) இரவு இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து ஏற்பட்ட மோதலின் போது இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை மற்றும் மகன் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு மகன் உயிரிழந்தார். 

 உயிரிழந்தவர் யடிதோல, நாவுத்துடுவ பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய திருமணமாகாத இளைஞர் அஷேன் சாமிக பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 காயமடைந்த தந்தை அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவராவார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4