இரண்டு கொலை வழக்கில் கனடியருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை

#Arrest #Canada #Murder #Prison
Prasu
1 year ago
இரண்டு கொலை வழக்கில் கனடியருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை

கனடாவில் இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த பிரஜை ஒருவருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை விதித்துள்ளது.

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரு தனித்தனி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாகவே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான ஜஸ்டின் போஸ் என்ற நபருக்கு, மொத்தமாக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனைக விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின். உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தண்டனையை விதித்துள்ளது.

மார்ச் 25, 2022: 30 வயதான கோடி மொஸ்டாட் லாங்க்லியில் உள்ள ஓர் ஹோட்டலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 27, 2022: 37 வயது ட்ராய் ரெக்னியர் சற்ரே நகரில் உள்ள 16600-வது 19வது வீதியில் உள்ள வீடொன்றுக்கு வெளியே, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயரிழந்தார். இந்த இரண்டு கொலைகளுக்கும் முக்கிய சந்தேக நபராக போஸை, போலீசார் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதி கைது செய்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1749712659.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4