ஆட்சியை கைப்பற்றிய தமிழரசுக் கட்சி! சுமந்திரன் தெரிவித்த தகவல்

#SriLanka #M. A. Sumanthiran #Jaffna #Lanka4 #IlankaThamilarasukKadsi #Mayor #SHELVAFLY
Mayoorikka
1 year ago
ஆட்சியை கைப்பற்றிய தமிழரசுக் கட்சி! சுமந்திரன் தெரிவித்த தகவல்

"யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்ற ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்."- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று தெரிவித்தார்.

 யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

 "யாழ்ப்பாணம் மாநகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழரசுக் கட்சியே பெற்றுக்கொண்டது. இதனடிப்படையில் மேயர் மற்றும் துணை மேயரை நிறுத்தி வெற்றியையும் பெற்றுள்ளோம். . இதற்கு ஒத்துழைத்த எமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 இந்த உள்ளூராட்சி சபைகளில் எந்தத் தரப்பினர் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்களோ அவர்களே ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே நாங்கள் கூறியிருந்தோம். அந்தக் கோட்பாட்டுக்கு அமைவாக யாழ். மாநகரத்தில் நாங்கள் செயற்பட்டிருக்கின்றோம். 

இந்தக் கோட்பாட்டுக்கு வேறு சில கட்சிகளும் இணங்கியிருந்தன. எங்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் அவர்கள் அதனைத் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்தக் கோட்பாட்டை அவர்கள் தற்போது மீறியுள்ளனர்." - என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1749803680.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4