காய்ச்சல், சளி இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!

#SriLanka #School #Lanka4 #Fever #SHELVAFLY
Mayoorikka
1 year ago
காய்ச்சல், சளி இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!

காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டுள்ள சிறுவர்களைப் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

 டெங்கு அல்லது சிக்குன்குனியா இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், குழந்தைகள் கொசு வலையைப் பயன்படுத்துவது முக்கியம் என்றும், இது மற்றவர்களுக்கு தொற்றுவதை தடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 இன்புளுவென்சா போன்ற வைரஸ் விரைவாக சிறுவர்களிடத்தே பரவக் கூடிய சாத்தியம் நிலவுகிறது. காய்ச்சலுடன் எலும்பு மூட்டுக்களில் அதிக வலி உணரப்படுவது குறிப்பாக சிக்குன்குனியா நோய்க்கான அறிகுறியாகும்.

 குறித்த நோயாளிகளுக்கு இயற்கையான திரவ உணவை வழங்குவது மிகவும் முக்கியமெனவும் டெங்கு நோயாளிகளுக்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற உணவை வழங்க வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளார். மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிக அளவில் பதிவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1749803680.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4