செம்மணிப் புதைகுழியில் பல குழந்தைகளின் எலும்புக் கூடுகள் மீட்பு!

#SriLanka #Jaffna #Lanka4
Mayoorikka
1 year ago
செம்மணிப் புதைகுழியில் பல குழந்தைகளின் எலும்புக் கூடுகள் மீட்பு!

செம்மணி புதைகுழியில் இதுவரையில் மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக செம்மணி மனித புதைகுழி அகற்றும் நடவடிக்கைகளைப் பொறுப்பேற்றுள்ள தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ஜீவன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் போரசிரியர் தெரிவிக்கையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் ஆகும்.

 உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள். உடல்கள் புதைக்கப்பட்ட திகதியை கண்டறிவதற்காக ஆடைகள் அல்லது செல்லோபோன் உறைகள் போன்றவற்றை பயன்படுத்த உள்ளோம். மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்படும்.மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம். 

 செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளோம். நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன். இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் . 

இதறகு மேலதிக விசாரணைகள் தேவை.- என்றார். இதேவேளை செம்மணி மனிதபுதைகுழி தொடர்பான உண்மைத் தன்மைகளை இலங்கை வெளிப்படுத்த வேண்டும் என்று மன்னிப்பச்சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1749803680.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4