G7 மாநாட்டில் இந்திய பிரதமரை சந்தித்த கனேடிய பிரதமர்

#India #PrimeMinister #Canada #NarendraModi
Prasu
1 year ago
G7 மாநாட்டில் இந்திய பிரதமரை சந்தித்த கனேடிய பிரதமர்

கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்துப் பேசிக்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள். 

அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் மீண்டும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கனடாவும் இந்தியாவும் மீண்டும் புதிய உயர் ஸ்தானிகர்களை நியமிக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலரான விக்ரம் மிஸ்ரி இது குறித்து பேசும்போது, உயர் ஸ்தானிகர்களை மீண்டும் நியமிக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளது, இரு நாடுகளுக்கிடையிலான மிக முக்கியத்துவம் வாய்ந்த உறவின் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முதல் படியாகும் என்று கூறியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750233712.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4