செம்மணி மனித புதைகுழி விவகாரம்! ஐ.நா உயர்ஸ்தானிகர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்

#SriLanka #UN #Human #Lanka4 #Human Rights
Mayoorikka
1 year ago
செம்மணி  மனித புதைகுழி  விவகாரம்!  ஐ.நா உயர்ஸ்தானிகர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் உள்ளிட்ட ஐந்து அமைப்புக்களே இவ்வாறு கோரிக்கையை விடுத்துள்ளன.

 கோரிக்கையில் அவர்கள் முன்வைக்கப்பட்ட விடயங்களாவன, இலங்கையில் தீர்க்கப்படாத மனித உரிமை மீறல்களுக்கு, சர்வதேச விசாரணையை வலுப்படுத்தவும், பொறுப்புக்கூறலைக் கோரும் வகையிலும், இலங்கைக்கான பயணத்தை அவர் பயன்படுத்த வேண்டும். 

 யாழ்ப்பாணம் செம்மணியைப் போன்ற, உள்நாட்டுப் போர் உரிமை மீறல்களுடன் தொடர்புடைய மனித புதைகுழிகள் மற்றும் தெற்கில் ஜேவிபி எழுச்சியுடன் தொடர்புடைய மனித புதைகுழிகளைப் பார்வையிடவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் வலியுறுத்தியுகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750284781.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4