முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்; படகு மீட்பு! தேடுதல் தீவிரம்

#SriLanka #Fisherman #Mullaitivu #Lanka4 #Missing #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
முல்லைத்தீவில்  கடலுக்கு  சென்ற மீனவர் மாயம்; படகு மீட்பு! தேடுதல் தீவிரம்

முல்லைத்தீவு - கள்ளப்பாடு, தீர்த்தக்கரை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் படகு மீட்கப்பட்டதோடு மீனவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

 குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. இன்று அதிகாலை மீனவ படகு ஒன்று நடு கடலில் தனியாக யாருமற்ற நிலையில் மிதந்து வந்துள்ளது. இந்நிலையில் படகில் குறித்த நபரின் சறம் காணப்பட்டுள்ளது. 

 அதனையடுத்து தொழிலுக்கு சென்ற மீனவரின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவரினை 8 படகுகளில் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 குறித்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான வின்சன்டிப்போல் அருமைராசா என்பரே நீரில் மாயமாகியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750284781.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4