மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்றுபுதைத்தது ஏன்? செம்மணியில் போராட்டம்

#SriLanka #Jaffna #Protest #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்றுபுதைத்தது ஏன்? செம்மணியில் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி செம்மணி சந்தியில் இன்று போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது.

 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று காலை 10.00 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வந்தது. இவை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபடுவோர், 'மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்றுபுதைத்தது ஏன்? சிந்துபாத்தியில் சிந்தப்பட்ட இரத்ததிற்கு நீதி எப்போது? காணாமல் போனவர்கள் நினைவாக செம்மணியில் நீதிக்காக நிற்கிறோம்இ பதுக்கப்பட்ட உண்மை வெளிக்கொண வேண்டும்' போன்ற பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

 அத்தோடு போராட்டம் நடைபெறும் இடத்தில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வில் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம்கட்ட அகழ்வுப் பணி இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750358745.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4