இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள சீன பிரஜைகள்!

#SriLanka #China #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள சீன பிரஜைகள்!

85 சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 இலங்கையில் தங்கியிருந்து இணையவழி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 85 சீனப் பிரஜைகளும் இன்று அதிகாலை 01.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் யு.எல் – 880 விமானம் ஊடாக சீனாவின் குவாங்சோ நகரத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 85 சீனப் பிரஜைகளும் நாடு கடத்தப்படுவதற்காக வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 சீனப் பிரஜைகளுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் உட்பட சுமார் 172 அதிகாரிகள் சீனாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750457602.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4