கனடாவில் காணாமல் போன 3 வயது குழந்தை - தாய் கைது

#Arrest #Canada #baby #Rescue #Missing
Prasu
11 months ago
கனடாவில் காணாமல் போன 3 வயது குழந்தை - தாய் கைது

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை 3 வயதுச் சிறுமி ஒருத்தி காணாமல்போன சம்பவத்தில் அவளது தாய் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் வாழும் மூன்று வயதுச் சிறுமி ஒருத்தி மாயமான நிலையில், பொலிசார் அவளை தீவிரமாகத் தேடிவந்தார்கள். 

இந்நிலையில், புதன்கிழமை மதியம் 2.00 மணியளவில், ட்ரோன் ஒன்று நெடுஞ்சாலை 417இன் ஓரமாக குழந்தை கிடப்பதைக் கண்டறிய உதவியது.

உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்தக் குழந்தை நீரிழப்பினால் அவதியுற்றிருந்தது தெரியவந்தது. மற்றபடி அவள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதே நேரத்தில், குழந்தையை கவனிக்காமல் விட்டதற்காக அதன் தாய் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் செலவிட நேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கும் சில பிரச்சினைகள் இருப்பதாக அவரது சட்டத்தரணி கூறியுள்ள நிலையில், குழந்தையின் எதிர்காலம் கருதி, அவரது பெயரை வெளியிடவிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750492655.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4