ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

#SriLanka #Fuel #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

ஈரான் - இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. 

 அதன்படி யாழ்ப்பாணத்தில் இன்று நீண்ட வரிசையில் நின்று மக்கள் எரிபொருளை பெற்று செல்கின்றனர். நாடளாவிய ரீதியிலும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த சில நாட்களுக்கு முன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தது எரிபொருளை பெற்று சென்ற நிலையில் தற்போது மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. 

 ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால், கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

 இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு ஹோர்முஸ் நீரிணைக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை, ஆனாலும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்களால், அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

 இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அதன் தாக்கம் தென்படலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750630849.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4