மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை! இலங்கைக்கு வரப்போகும் ஆபத்து

#SriLanka #Israel #War #Lanka4 #Iran #SHELVAFLY
Mayoorikka
1 year ago
மூடப்படும் ஹோர்முஸ் நீரிணை! இலங்கைக்கு வரப்போகும் ஆபத்து

ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 

இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

 அமெரிக்காவுக்கு பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்து வரும், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

 இனிவரும் நாட்களில் அதிகமாகத் தேடப்பட, பேசப்படவிருக்கும் ஒரு பெயர் தான் இது ஈரானுக்குச் சொந்தமான இந்த 21 மைல் அகலம் கொண்ட நீரிணையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஈரானை அதனுடன் பெரியளவில் ஒத்திசைவு கொள்ளாத ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் ஆகியவற்றிலிருந்து பிரிப்பது இந்தக் குறுகிய, ஆனால் மிகப் பரபரப்பான வர்த்தகப் போக்குவரத்து வழியான நீரிணை தான்.

 உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் (Hormuz) நீரிணை, மத்திய கிழக்கின் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்துச் செல்லும் ஒரு குறுகிய கடல்வழிப் பாதை. தினசரி மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெய் இந்தப் பாதை வழியாகத்தான் பயணிக்கிறது. 

 உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% முதல் 30% வரையிலான பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. ஜப்பான், தென் கொரியா, இந்தியா, சீனா போன்ற பிரதான ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கும் எண்ணெய் கொண்டு செல்ல இதுவே பிரதான வழி.

 இந்த நீரிணை மூடப்பட்டால், அது சர்வதேச எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, எண்ணெய் விலைகளை கடுமையாக உயர்த்தும். உலகப் பொருளாதாரத்தில் பெரும் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கி, எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

 டிரம்பின் அமெரிக்கா இன்று ஈரானிய அணு உலைத்தளங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஈரானின் பதிலடி இது.

 ஆனால் அடி வாங்கப்போவது எரிபொருளுக்காக இன்னும் ஓரிரு மாதங்களில் தடுமாறி தள்ளாடப்போகும் இலங்கை போன்ற நாடுகள் தான்.


லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750630849.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4