மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: தயார் நிலையில் இலங்கை விமான நிலையங்கள்

#SriLanka #Airport #Lanka4 #Katunayaka #SHELVAFLY
Mayoorikka
1 year ago
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: தயார் நிலையில் இலங்கை விமான நிலையங்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

 தற்போதைய பிராந்திய சூழ்நிலைகள் காரணமாக சில விமானங்களில் பயண தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் வழமைபோல் இயக்கப்படும் என சபை உறுதிப்படுத்தியுள்ளது.

 மேலும் கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்கக் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை விமான நிலையம் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. 

 இந்நிலையில், ஈரான் கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான 5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு நேற்று திருப்பி விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு பறந்து கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் டோஹாவில் அருகிலுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்தும் பதிலடித் தாக்குதல்களை எதிர்பார்த்து நேற்று (23) மூடப்பட்டிருந்த தனது வான்வெளியை கட்டார் மீண்டும் திறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 நேற்று இரவு அல்-உதெய்த் விமானப்படை தளத்தில் ஈரான் ஏவுகணைகளை வீசியது. இதனால் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கட்டார் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750630849.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4