கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #SaudiArabia #SHELVAFLY
Mayoorikka
1 year ago
கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு!

கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

 இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் நேற்று கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. 

 ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே கட்டார் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் பகிரங்கமாக தெரிவித்திருந்தது. 

 இரு தரப்புக்கும் இடையிலான பதிலடித் தாக்குதல்கள் மோசமடைந்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. 

 இந்த நிலையிலேயே கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750630849.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4