யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார் ஐ.நா ஆணையாளர்! உக்கிரமடைந்த போராட்டம்

#SriLanka #UN #Lanka4 #Human Rights #SHELVAFLY
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார் ஐ.நா ஆணையாளர்! உக்கிரமடைந்த போராட்டம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. 

 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இவ் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலய வீதியில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. 

 இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இன அழிப்பு, செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விடயம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. 

 இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சற்றுமுன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

 இன்று காலை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட அவர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களிடமிருந்து மகஜர்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750798658.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4