நான்கு தசாப்த காலப் போரின் போது நடந்த குற்றங்களுக்கு தீர்வு இல்லை - தமிழரசு கட்சியினர் கடிதம்!
#SriLanka
#Letters
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
ஐ.நா. உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க்கிற்கு இலங்கை தமிழரசு கட்சி தலைவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் நாட்டில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு நேர்மையான மற்றும் உண்மையான அணுகுமுறையின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகள் போன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
நான்கு தசாப்த காலப் போரின் போது நடந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் பிரச்சினையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
