தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு! தமிழ் பிரதிநிதிகளிடம் ஐ.நா ஆணையாளர்

#SriLanka #Tamil People #UN #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு! தமிழ் பிரதிநிதிகளிடம் ஐ.நா ஆணையாளர்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உறுதியாகவுள்ளது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.

 யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 நேற்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 மேற்படி கலந்துரையாடலில் வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் போன்ற பல விடயங்கள் பேசப்பட்டன என்று சந்திப்பில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750891673.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4