இலங்கைக்கான ஈரானிய தூதரை சந்தித்தார் வௌியுறவு அமைச்சர்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
இலங்கைக்கான ஈரானிய தூதரை சந்தித்தார் வௌியுறவு அமைச்சர்!

இலங்கைக்கான ஈரானிய தூதர் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. 

 தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறினார். 

 பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவம் இந்த கலந்துரையாடலின் போது ஈரானிய தூதருக்கு வலியுறுத்தப்பட்டதாக  கூறினார். 

 மோதல்கள் மேலும் அதிகரிப்பதால் பிராந்தியத்திலும் இலங்கையிலும் ஏற்படும் தாக்கம் மற்றும் ஈரானில் இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர்   தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

 இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750891673.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4