யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Accident #Train #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி  குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சுந்தரக்குருக்கள் ஞானசர்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த நபர் நேற்று பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார். 

ரயில் வரும்போது ரயில் கடவை மூடப்பட்டிருந்தபோதும் அதனை கடப்பதற்கு முயற்சித்தவேளை ரயில் அவரது துவிச்சக்கர வண்டியின் பின் பக்கத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

 விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

 அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

 உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752691403.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4