வெளிநாட்டுப் பெண் குஷ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்கவில் கைது!

#Police #Airport #drugs
Soruban
1 year ago
வெளிநாட்டுப் பெண் குஷ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்கவில் கைது!

5 கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (16) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்டவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஆவார். சந்தேக நபரான வெளிநாட்டுப் பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து நேற்றைய தினம் இரவு 07.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பின்னர் சந்தேக நபரான வெளிநாட்டுப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Red Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான வெளிநாட்டுப் பெண் கொண்டு வந்த பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோ 700 கிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை






இச்செய்திக்கு பிரதான அனுசரணை
Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4