சிறுநீரக செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது?

#SriLanka #Health #kidney
Soruban
10 months ago
சிறுநீரக செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது?

சிறுநீரக செயலிழப்பு அதிகரித்து வரும் நிலையில் சிறுநீரக செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ நிபுணர்கள் பதிலளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்' ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது சிறுநீரக செயலிழப்பால் அதிமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஏன் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகின்றது? அதற்கான அறிகுறிகள் என்ன, தடுக்கும் வழிமுறைகள் என்ன என பலவாறான விடங்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் சிறுநீரக செயலிழப்பு தொடர்பில் எழுந்த கேள்விகளும் அதற்கு நிபுணர்கள் வழங்கிய பதில்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

01- நாள் ஒன்றுக்கு உணவில் உப்பு எவ்வளவு சேர்க்கலாம்? 

ஒரு சிறிய டீஸ்பூன் அளவுக்கான உப்பைதான் தினமும் எடுக்க வேண்டும். எவ்வளவு உப்பை குறைக்க முடியுமோ அவ்வளவையும் குறைக்க வேண்டும்' 

 02- தண்ணீர் எவ்வளவு அருந்த வேண்டும்? 

ஒரு ஆரோக்கியமான நபர் சாதாரணமான நாட்களில் 3 லீற்றர் வரையும் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் 4 லீற்றர் வரையும் தண்ணீர் அருந்த வேண்டும்.

 03- சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் என்னென்ன? 

கால் வீக்கம் இருக்கலாம், சிறுநீர் குறைவாக வெளியேறலாம், நோய் கொஞ்சம் தீவிரமாகும்போது மூச்சுத்திணறல், ரத்தசோகை, பசியின்மை ஏற்படலாம். அந்த அறிகுறிகளே தீவிர நிலையில்தான் தென்படும். தேவையில்லாத மருந்துகளை உட்கொள்வது, வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தமும் சில சந்தர்ப்பங்களில் அறிகுறியாக இருக்கலாம்.

 04- சிறுநீரக பாதிப்புகளை எப்படி கண்டுபிடிப்பது? 

கிரியேட்டினின் அளவை வைத்துதான் ஒருவர் எந்த கட்டத்தில் உள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதன் அளவு உயர்ந்தால் எந்தளவுக்கு நோய் தீவிரமாக உள்ளது என்பதை கூற முடியும். ஐந்தாம் கட்டம் என்றால் கிட்டத்தட்ட இறுதி நிலை எனலாம். அதாவது, சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்துவிட்டது என அர்த்தம்.

 05- என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும்?

 கிரியேட்டினின் அளவை பரிசோதிப்பதற்கான ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், அல்டிராசவுண்ட் மூலம் சிறுநீரகம் எப்படி இருக்கிறது, அதன் அளவு சரியாக இருக்கிறதா, கல், கட்டி உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்படும் .

 06-வருமுன் காப்பது எப்படி? 

புரதம் வெளியேறுவது, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால், நீரிழிவு நோய், eGFR, குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கிறதா. இந்த ஆறு அம்சங்களையும் ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும். 

 07- என்ன மாதிரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்?

பொட்டாசியம் சம்மந்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பை கூடுமானவரை குறைக்க வேண்டும். மேலும், புரதச்சத்து நிறைந்த இறைச்சி உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆன்டி ஆக்ஸிடென்ட், நிறைந்த, கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

08- கட்டட தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் சிறுநீரக பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது ஏன்?

வெயிலில் அதிகமாக வேலை பார்க்கிறார்கள். தண்ணீர் போதுமான அளவில் அருந்த மாட்டார்கள். கழிவறை வசதி இல்லையென்றால் தண்ணீர் போதுமான அளவில் குடிக்க மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு சுகாதாரமான கழிப்பட வசதியையும் போதுமான தண்ணீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.

இவையே சிறுநீரக செயலிழப்பு தொடர்பான கேள்விகளும் அவற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் வழங்கிய பதில்களும் எனக் குறிப்பிடலாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753390608.jpg



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4